Image : @EURO2024 
கால்பந்து

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: போர்ச்சுகல் அணியை வீழ்த்தி ஜார்ஜியா அசத்தல் வெற்றி

கோல் அடிக்க போர்ச்சுகல் அணி போராடியும் முடியவில்லை.

தினத்தந்தி

முனிச்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுகல் - ஜார்ஜியா அணிகள் மோதின.ஆட்டத்தின் தொடக்கத்தில் 2வது நிமிடத்தில் ஜார்ஜியா அணியின் கிவிச்சா கோல் அடித்தார். இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் 57வது நிமிடத்தில் ஜார்ஜியா அணியின் ஜார்ஜஸ் கோல் அடித்தார். இதனால் ஜார்ஜியா 2-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து பதில் கோல் அடிக்க போர்ச்சுகல் அணி போராடியும் முடியவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் 2-0 என ஜார்ஜியா வெற்றி பெற்றது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு