image courtesy:AFP 
கால்பந்து

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: ஜார்ஜியாவை வீழ்த்தி ஸ்பெயின் காலிறுதிக்கு தகுதி

ஐரோப்பிய கால்பந்து தொடரில் தற்போது நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தினத்தந்தி

கெலோன்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் கெலோன் நகரில் நடந்த நாக்-அவுட் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயின், ஜார்ஜியாவுடன் மோதியது.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜார்ஜியாவை விரட்டியடித்து காலிறுதிக்கு முன்னேறியது. 18-வது நிமிடத்தில் எதிர்பாராவிதமாக எதிரணிக்கு சுயகோல் வழங்கி பின்தங்கிய ஸ்பெயின் அதன் பிறகு தாக்குதலை தீவிரப்படுத்தி கோல் மழை பொழிந்தது. ரோட்ரி, பாபியன் ரூஸ், நிகோ வில்லியம்ஸ், டானி ஆல்மோ ஆகியோர் அந்த அணியில் கோல் போட்டு அசத்தினர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து