கோப்புப்படம்  
கால்பந்து

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் ஸ்பெயின் - பிரான்ஸ் இன்று பலப்பரீட்சை

உலக தரவரிசையில் 8-வது இடம் வகிக்கும் ஸ்பெயின் நடப்பு தொடரில் எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற ஒரே அணியாகும்.

தினத்தந்தி

முனிச்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட இந்த கால்பந்து திருவிழாவில் முனிச் நகரில் இன்றிரவு நடக்கும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான ஸ்பெயினும், பிரான்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன. உலக தரவரிசையில் 8-வது இடம் வகிக்கும் ஸ்பெயின் நடப்பு தொடரில் எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற ஒரே அணியாகும். 11 கோல்கள் அடித்துள்ள ஸ்பெயினின் தடுப்பாட்டம் வலுவாக உள்ளது.

தாக்குதல் பாணிக்கு பெயர் போன பிரான்ஸ் அணி போர்ச்சுலுக்கு எதிரான கால்இறுதியில் தடுமாற்றம் கண்டது. அதில் ஒரு கோல் கூட அடிக்காத பிரான்ஸ், இறுதியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் போர்ச்சுகலை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. மூக்கில் காயடைந்ததால் அந்த அணியின் கேப்டன் கிலியன் எம்பாப்பே பிரத்யேகமான முககவசம் அணிந்து விளையாடி வருகிறார். முக்கியமான இந்த ஆட்டத்தில் அவர் கைகொடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சர்வதேச கால்பந்தில் இவ்விரு அணிகள் இதுவரை 36 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 16-ல் ஸ்பெயினும் 13-ல் பிரான்சும் வெற்றி பெற்றுள்ளன. 7 ஆட்டம் டிரா ஆனது.

இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி டென்5 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்