கால்பந்து

மோசமான தோல்வியை அடுத்து சென்னையின் எப்.சி அணியின் பயிற்சியாளர் அதிரடி நீக்கம்

ஐ.எஸ்.எல் கால்பந்தில் மோசமான தோல்வி பெற்றதையடுத்து சென்னையின் எப்.சி அணியின் பயிற்சியாளர் நீக்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

கோவா,

11 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி அணி இதுவரை 16 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 டிரா, 7 தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கிறது.

சென்னை அணி கடந்த புதன்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் 0-5 என்ற கோல் கணக்கில் எப்.சி.கோவா அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. சென்னை அணியின் மோசமான தோல்வி இதுவாகும். இதையடுத்து சென்னை அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த 52 வயது பேசிதார் பாண்டோவிச் (மான்டினெக்ரோ) நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார்.

உதவி பயிற்சியாளர் சையது சபீர் பாஷா இடைக்கால தலைமை பயிற்சியாளராக இருப்பார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னையின் எப்.சி. அணியின் இணை உரிமையாளர் விதா டேனி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த காலங்களில் நாங்கள் தோல்வியும் அடைந்து இருக்கிறோம். வெற்றியும் பெற்றுள்ளோம்.

ஆனால் ஒரு கிளப்பாக இதுபோன்ற மோசமான தோல்வியை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க முடியாது. இந்த சீசன் முழுவதையும் சபீர் பாஷா பார்த்து கொள்வார் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்