* ரஷிய பெண் அரசியல்வாதியும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கான பாராளுமன்ற கமிட்டியின் தலைவியுமான தமரா பிளட்டினோவா, அந்த நாட்டு ரேடியோவுக்கு அளித்த பேட்டியில் பெண்களுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். அவர் கூறுகையில், உலக கோப்பை கால்பந்து போட்டியை நேரில் காண ரஷியா வரும் வெளிநாட்டு ரசிகர்களுடன், பெண்கள் யாரும் உறவு வைத்து கொள்ளாதீர்கள். வெளிநாட்டு ரசிகர்களை திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றாலும், 1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு வெளிநாட்டு உறவின் மூலம் பிறந்த குழந்தைகள் சந்தித்தது போன்ற பாதிப்பை தான் இந்த குழந்தைகளும் சந்திக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.