கால்பந்து

யூரோ கால்பந்து இறுதி போட்டியில் ஜெர்மெனி வெற்றி

யூரோ கால்பந்து இறுதி போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மெனி வெற்றி பெற்றுள்ளது.

கிரகோவ்,போலாந்து

21 வயதிற்க்கு உட்பட்டோருக்கான ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் போலாந்தில் நடைபெற்றது.

இதன் இறுதி போட்டியில் ஜெர்மெனி அணியும் ஸ்பெயின் அணியும் விளையாடின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் 40-வது நிமிடத்தில் ஜெர்மெனியின் வெய்ஷர் முதல் கோல் அடித்தார். இது அவர் அடிக்கும் முதல் கோலாகும்.

இதன் மூலம் முதல் 45 நிமிட முடிவில் ஜெர்மெனி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாம் பகுதி ஆட்டம் தொடங்கிய முதல் ஸ்பெயின் அணியினர் கோல் அடிக்க பல முயற்சிகள் செய்தனர். ஆனால் அவர்களின் முயற்சிகளை ஜெர்மெனி வீரர்கள் தடுத்து நிறுத்தினர். ஜெர்மெனி அணிவீரர்களும் அடுத்த கோல் அடிக்க முடியாமல் இருந்தனர். இறுதி வரை கோல்கள் ஏதும் அடிக்கபடாததால் ஜெர்மெனி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

ஒரே கோல் அடித்து வெற்றிக்கு காரணமாக அமைந்த வெய்ஷர் ஆட்டநாயகன் விருது பெற்றார். இது ஜெர்மெனி அணியின் இரண்டாவது சாம்பியன் பட்டமாகும். ஸ்பெயின் அணி இதற்கு முன்னதாக மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி