கால்பந்து

கால்பந்து தரவரிசையில் இந்தியாவுக்கு சறுக்கல்

கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்தியாவுக்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கால்பந்து அணிகளின் புதிய தரவரிசைப்பட்டியலை சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) நேற்று வெளியிட்டது. இதில் பெல்ஜியம், உலக சாம்பியன் பிரான்ஸ், பிரேசில், இங்கிலாந்து அணிகள் முறையே முதல் 4 இடங்களில் தொடருகின்றன.

உலக கோப்பை போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று போட்டியில் வங்காளதேச அணியுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்ட இந்திய அணி 2 இடம் சரிந்து 106-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதே சமயம் வங்காளதேச அணி 3 இடம் முன்னேறி 184-வது இடத்தை பிடித்துள்ளது.