கால்பந்து

தெற்காசிய கால்பந்து: இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான ஆட்டம் ‘டிரா’

தெற்காசிய கால்பந்து போட்டியில், இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிராவானது.

தினத்தந்தி

மாலே,

5 அணிகள் இடையிலான 13-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மாலத்தீவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 107-வது வகிக்கும் இந்திய அணி, 205-வது இடத்தில் உளள இலங்கையை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றியை ருசிக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்திய அணியின் தாக்குதல் ஆட்டத்தில் தீவிரம் குறைவாக தெரிந்தது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட இலங்கை அணி எல்லா வகையிலும் சவால் அளித்தது. முடிவில் இந்த ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத இந்திய அணி, முதல் ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்துடன் டிரா கண்டு இருந்தது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை மறுதினம் நேபாளத்தை சந்திக்கிறது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்