கோப்புப்படம் 
கால்பந்து

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கால்பந்து அணி அறிவிப்பு..!! சுனில் சேத்ரி இடம்பெற்றார்

சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) சீனாவின் ஹாங்சோவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டி 2023க்கான 17 பேர் கொண்ட ஆண்கள் அணியை அறிவித்துள்ளது. இந்தியாவின் கால்பந்து சின்னமான சுனில் சேத்ரியின் தலைமையில் 17 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆண்கள் கால்பந்து அணி:-

குர்மீத் சிங், தீரஜ் சிங் மொய்ராங்தெம், சுமித் ரதி, நரேந்தர் கஹ்லோட், அமர்ஜித் சிங் கியாம், சாமுவேல் ஜேம்ஸ், ராகுல் கேபி, அப்துல் ரபீஹ் அஞ்சுகண்டன், ஆயுஷ் தேவ் செத்ரி, பிரைஸ் மிராண்டா, அஸ்பர் நூரானி, ரஹீம் அலி, வின்சி பரேட்டோ, ரோஹிர்ட் ச்ஹெத்ரி, ஜி சுனில், சுனில் சிங், அனிகேத் ஜாதவ்.

இதனிடையே கிளப்புகளின் கெடுபிடி காரணமாக முக்கிய வீரர்கள் விளையாடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதன்படி துணைக் கேப்டனும், இந்தியாவின் சிறந்த கோல்கீப்பருமான குரு பிரித் சிங் மற்றும் சந்தோஷ் ஜிங்கான் ஆகிய முக்கிய வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை.

9 ஆண்டுகளுக்குப்பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. 

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு