image courtesy: Indian Super League twitter  
கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: பஞ்சாப் எப்.சி. - கோவா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் எப்.சி. - எப்.சி. கோவா அணிகள் மோதின.

டெல்லி,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் டெல்லியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் எப்.சி. - எப்.சி. கோவா அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் எப்.சி. கோவா அணி சார்பில் கார்ல் ஆட்டத்தின் 5-வது நிமிடத்திலும், நோவா 72-வது நிமிடத்திலும், கார்லஸ் 84-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். பஞ்சாப் எப்.சி. அணி சார்பில் வில்மர் ஜோர்டான் ஆட்டத்தின் 54-வது நிமிடத்திலும், லூகா 61-வது நிமிடத்திலும், ஜுவான் மேரா 78-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

இதையடுத்து ஆட்டநேர முடிவில் பஞ்சாப் எப்.சி. - எப்.சி. கோவா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 3-3 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்