கால்பந்து

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: மோகன் பகான்- கோவா அணிகள் இன்று மோதல்

இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் மோகன் பகான்- கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஏடிகே மோகன் பகான் - கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஏடிகே மோகன் பகான் அணி தாங்கள் விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றி , 2 டிரா , 2 தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது . கோவா அணி தாங்கள் விளையாடி உள்ள 7 போட்டிகளில் 2 வெற்றி 3 தோல்வி, 2 டிரா கண்டு புள்ளி பட்டியலில் 8 -வது இடத்தில் உள்ளது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி