கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து - ’பிபா’வுக்கு ஈரான் கோரிக்கை!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

நியூயார்க்,

உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன்-ஜூலை மாதங்களில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் 48 அணிகள் பங்கேற்கின்றன. அதில் ஈரான் 'ஜி' பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்த பிரிவில் பெல்ஜியம், எகிப்து, நியூசிலாந்து ஆகிய அணிகளும் உள்ளன.

இதற்கிடையில், அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக அந்த நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பது சாத்தியமில்லை என்று ஈரான் விளையாட்டுத்துறை அமைச்சர் அக்மத் டோன்யமாலி தெரிவித்தார். இதனால் ஈரான் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், கால்பந்து உலகக் கோப்பையில் ஈரானின் முதல் சுற்றுப் போட்டிகளை அமெரிக்காவுக்கு பதிலாக மெக்சிகோவில் நடத்த வேண்டும் என பிபாவுக்கு ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதலால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கூறியுள்ளது.