கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: மோகன் பகான் அணிக்கு 2-வது வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மோகன் பகான் அணி 2-வது வெற்றியை பெற்றது.

தினத்தந்தி

கோவா,

11 அணிகளுக்கு இடையிலான 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஏ.டி.கே. மோகன் பகான் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை பந்தாடி 2-வது வெற்றியை சுவைத்தது. ஏ.டி.கே. அணியில் ராய் கிருஷ்ணா, மன்விர் சிங், லிஸ்டான் கோலக்கோ ஆகியோர் கோல் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் மும்பை சிட்டி, ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணி, மும்பைசிட்டி அணியை வீழ்த்தியது.

இன்றைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்- பெங்களூரு எப்.சி. அணிகள் (இரவு 7.30 மணி) மோதுகின்றன.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு