கால்பந்து

ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னையை வீழ்த்தியது ஏடிகே மோகன் பகான்..!

நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் சென்னையின் எப்சி மற்றும் ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதின.

கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்சி மற்றும் ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் அணி 1-0 என்ற கோல் சென்னை அணியை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் மோகன் பகான் அணி சார்பில் ராய் கிருஷ்ணா ஆட்டத்தின் 45+3 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். சென்னையின் எப்சி அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து மோகன் பகான் அணி வெற்றி பெற்றது.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் - ஒடிசா எப்.சி அணிகள் (இரவு 7.30 மணி) மோதுகின்றன.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்