image courtesy: Indian Super League twitter  
கால்பந்து

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஏ.டி.கே மோகன் பகான் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி

கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற போட்டியில் ஏ.டி.கே மோகன் பகான்-பெங்களூரு அணிகள் மோதின.

தினத்தந்தி

கொல்கத்தா,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற போட்டியில் ஏ.டி.கே மோகன் பகான்-பெங்களூரு அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெங்களூரு அணி சார்பில் ஜாவி ஆட்டத்தின் 78-வது நிமிடத்திலும் ராய் கிருஷ்ணா ஆட்டத்தின் 90+1-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். ஏ.டி.கே மோகன் பகான் அணி சார்பில் திமித்ரி ஆட்டத்தின் 90+3-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இதையடுத்து ஆட்டநேர முடிவில் பெங்களூரு அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஏ.டி.கே மோகன் பகான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்