கால்பந்து

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஒடிசாவை வீழ்த்தியது சென்னையின் எப்சி அணி..!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி ஒடிசாவை வீழ்த்தி சென்னையின் எப்சி அணி வெற்றி பெற்றது.

கோவா ,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எப்சி மற்றும் ஒடிசா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்சி அணி ஒடிசா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

சென்னையின் எப்சி அணி சார்பில் ஜெர்மன்பிரீத் சிங் 23-வது நிமிடத்திலும் மிர்லன் முர்செவ் 63-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். ஒடிசா அணி சார்பில் ஜாவி ஹெர்னான்டஸ் 90+6 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து 2-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்சி அணி வெற்றி பெற்றது.