கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி. அணி தோல்வி

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னையின் எப்.சி. அணி தோல்வியடைந்தது.

தினத்தந்தி

கோவா,

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு கோவா நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய 4-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, எப்.சி.கோவாவை சந்தித்தது. தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடினர். 20-வது நிமிடத்தில் கோவா அணியின் கோல் வாய்ப்பை சென்னை அணியினர் லாவகமாக தடுத்தனர். ஆனால் 30-வது நிமிடத்தில் கோவா கோல் போட்டது. அந்த அணியின் லென் டாங்கெல் இந்த கோலை அடித்தார். தொடர்ந்து கோவா அணியின் ஆதிக்கமே ஓங்கியது. கோவா வீரர்கள் பெர்ரன் கோராமினாஸ் 62-வது நிமிடத்திலும், கார்லஸ் பென்னா 81-வது நிமிடத்திலும் கோல் போட்டனர்.

கடைசி வரை சென்னை வீரர்களால் ஒரு கோல் கூட திருப்ப முடியவில்லை. முடிவில் கோவா அணி 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை தோற்கடித்தது. கடந்த சீசனில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை அணி இந்த முறையும் ஏமாற்றத்துடனே தொடங்கி இருக்கிறது. கொச்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்