கோப்புப்படம் 
கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை- மோகன் பகான் அணிகள் இன்று மோதல்

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

கொல்கத்தா,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி., மோகன் பகான் அணியை எதிர்கொள்கிறது.

நடப்பு தொடரில் ஏற்கனவே மோகன் பகானிடம் 1-3 என்ற கோல் கணக்கில் தோற்று இருந்த சென்னை அணி பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும். அதே நேரத்தில் மோகன் பகான் அணி தனது ஆதிக்கத்தை தொடர முயற்சிக்கும். எனவே இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

சென்னை அணி இதுவரை 18 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 'டிரா', 10 தோல்வி என 18 புள்ளிகளுடன் 11-வது இடத்திலும், ஏற்கனவே பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்ட மோகன் பகான் 12 வெற்றி, 3 'டிரா', 3 தோல்வி என 39 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் இருக்கிறது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்