கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: அரைஇறுதிக்குள் நுழைவது யார்? சென்னை-மும்பை அணிகள் இன்று மோதல்

ஏற்கனவே கோவா, கொல்கத்தா, பெங்களூரு அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் எஞ்சி ஒரு இடத்துக்கு சென்னையின் எப்.சி., மும்பை சிட்டி அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தினத்தந்தி

மும்பை,

6-வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே கோவா, கொல்கத்தா, பெங்களூரு அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் எஞ்சி ஒரு இடத்துக்கு சென்னையின் எப்.சி., மும்பை சிட்டி அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 87-வது லீக் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன. மும்பை 26 புள்ளிகளுடன் (17 ஆட்டம்) பட்டியலில் 4-வது இடத்திலும், சென்னை அணி 25 புள்ளிகளுடன் (16 ஆட்டம்) 5-வது இடத்திலும் உள்ளன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக அரைஇறுதிக்குள் நுழையும். சென்னை அணிக்கு மேலும் ஒரு லீக் ஆட்டம் எஞ்சியிருப்பதால், இன்றைய ஆட்டத்தில் குறைந்தது டிராவாவது செய்ய வேண்டியது அவசியமாகும்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்