கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி முதல் தோல்வி

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணி முதல் தோல்வி அடைந்தது.

கோவா,

11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 16-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சி.யை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னை அணி 0-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியிடம் தோல்வி கண்டது. பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பெங்களூரு வீரர் சுனில் சேத்ரி 56-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். சென்னை அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை. 3-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். பெங்களூரு அணிக்கு இது முதலாவது வெற்றியாகும்.

இன்று (சனிக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி)-ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்