கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை-ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிராவானது.

தினத்தந்தி

ஜாம்ஷெட்பூர்,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு ஜாம்ஷெட்பூரில் நடந்த 35-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தன. 26-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் வால்ஸ்கிஸ் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு அருமையாக கோலுக்குள் திரும்பியது. முதல் பாதியில் சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 89-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி வீரர் ஐசக் பதில் கோல் திருப்பினார். பரபரப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 7 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் சென்னை அணி ஒரு வெற்றி, 3 டிரா, 3 தோல்வி கண்டுள்ளது. இன்று ஓய்வு நாளாகும். புனேயில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 36-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி.-ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதுகின்றன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு