கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி அணி முதல் வெற்றி, 3-1 கோல் கணக்கில் சென்னையை சாய்த்தது

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி டெல்லி அணி முதல் வெற்றிபெற்றது.

தினத்தந்தி

சென்னை,

10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 58-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, டெல்லி டைனமோஸ் எப்.சி.யை சந்தித்தது. 16-வது நிமிடத்தில் டெல்லி டைனமோஸ் அணி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் டேனியல் இந்த கோலை அடித்தார். 38-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி சென்னை அணி வீரர் ரபெல் அகஸ்டா பதில் கோல் திருப்பினார். முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன. பிற் பாதியின் கடைசி கட்டத்தில் டெல்லி அணி அடுத்தடுத்து 2 கோல்கள் போட்டு அதிர்ச்சி அளித்தது. அந்த அணி வீரர்கள் பிக்ரம்ஜித் சிங் 78-வது நிமிடத்திலும், நந்தகுமார் சேகர் 82-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். அதன் பிறகு சென்னை அணி கோல் அடிக்க போராடினாலும் அதற்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. முடிவில் டெல்லி அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி இந்த சீசனில் முதலாவது வெற்றியை ருசித்தது. 12-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி ஏற்கனவே 4 டிராவும், 7 தோல்வியும் கண்டு இருந்தது. 12-வது ஆட்டத்தில் விளையாடிய சென்னை அணி சந்தித்த 9-வது தோல்வி இதுவாகும். இவ்விரு அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதுகின்றன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு