image courtesy: Indian Super League twitter  
கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர் - மும்பை சிட்டி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் - மும்பை சிட்டி அணிகள் மோதின.

தினத்தந்தி

ஜாம்ஷெட்பூர்,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் - மும்பை சிட்டி அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி சார்பில் ஜாவியர் சிவெரியோ ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். மும்பை சிட்டி அணி சார்பில் லல்லியன்சுவாலா சாங்டே ஆட்டத்தின் 74-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் ஜாம்ஷெட்பூர் - மும்பை சிட்டி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்