image courtesy: Indian Super League twitter  
கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணியை வீழ்த்தியது ஈஸ்ட் பெங்கால்

கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு எப்.சி. - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.

தினத்தந்தி

கொல்கத்தா,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு எப்.சி. - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், ஈஸ்ட் பெங்கால் அணி சார்பில் சவுல் கிரெஸ்போ ஆட்டத்தின் 19-வது நிமிடத்திலும், கிளெய்ட்டன் சில்வா 73-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். பெங்களூரு எப்.சி. அணி சார்பில் சுனில் சேத்ரி ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் ஈஸ்ட் பெங்கால் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எப்.சி. அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்