Image Tweeted By @IndSuperLeague 
கால்பந்து

ஐ.எஸ்.எல் கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றி

ஈஸ்ட் பெங்கால் அணி 3-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

கவுகாத்தி,

11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொச்சி, பெங்களூரு, புனே, கொல்கத்தா, ஜாம்ஷெட்பூர், சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்- ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.

இந்த போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணி 3-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஈஸ்ட் பெங்கால் அணி தரப்பில் கிளீடன் சில்வா 11வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். அதை தொடர்ந்து அந்த அணியின் கரிஸ் கிரியாகோ 52வது நிமிடத்தில் 2-வது கோலை அடிக்க மற்றும் ஜோர்டான் 84வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியின் மூன்றாவது கோலை அடித்தார்.

பின்னர் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் மாட் டெர்பிஷைர் கூடுதல் நேரத்தில் (92-வது நிமிடத்தில்) அந்த அணிக்கு ஆறுதல் கோலை அடித்தார். இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற ஈஸ்ட் பெங்கால் அணி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி