image courtesy: FC Goa twitter  
கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசாவை வீழ்த்தி கோவா அணி வெற்றி

கோவாவில் இன்று மாலை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா-ஒடிசா எப்.சி. அணிகள் மோதின.

தினத்தந்தி

கோவா,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று மாலை கோவாவில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா-ஒடிசா எப்.சி. அணிகள் மோதின.

இந்த போட்டியில் எப்.சி. கோவா அணி சார்பில் நோவா ஆட்டத்தின் 55-வது நிமிடம் மற்றும் 68-வது நிமிடத்தில் இரண்டு கோல்கள் அடித்தார். ஜே குப்தா ஆட்டத்தின் 90+6-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஒடிசா எப்.சி. அணி சார்பில் மோர்டாடா ஆட்டத்தின் 6-வது நிமிடம் மற்றும் 81-வது நிமிடத்தில் இரண்டு கோல்கள் அடித்தார்.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் எப்.சி. கோவா அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஒடிசா எப்.சி. அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து