கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேற்றம்

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கோவா அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

கோவா,

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கோவாவில் நேற்று இரவு நடந்த 80-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தன. 22-வது நிமிடத்தில் கோவா அணியின் பெர்ரான் கொராமினாஸ் முதல் கோல் அடித்தார். 25-வது நிமிடத்தில் கோவா அணி வீரர் எடு பெடியா கோல் திணித்தார். முதல் பாதியில் கோவா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 78-வது நிமிடத்தில் கோவா அணி வீரர் ஹீகோ கோல் அடித்தார். பதில் கோல் திருப்ப கேரளா அணியினர் எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் கோவா அணி 3-0 என்ற கோல் கணக்கில் கேரளா அணியை வீழ்த்தியது. 16-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி 9 வெற்றி, 4 டிரா, 3 தோல்வியுடன் 31 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்ததுடன் நாக்-அவுட் சுற்றுக்கு 2-வது அணியாக முன்னேறியது. ஏற்கனவே பெங்களூரு எப்.சி. அணி நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தது. 17-வது ஆட்டத்தில் ஆடிய கேரளா அணி சந்தித்த 7-வது தோல்வி இதுவாகும்.

நாளை (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு கவுகாத்தியில் நடைபெறும் 81-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.(கவுகாத்தி)-எப்.சி.புனே சிட்டி அணிகள் மோதுகின்றன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு