கோவா,
தொடக்கத்தில் தாக்குதல் பாணியை கையாண்ட ஈஸ்ட் பெங்கால் அணிக்கு சில பிரிகிக் வாய்ப்பு கிடைத்தன. ஆனால் அதனை அந்த அணியினரால் கவுகாத்தி வீரர்களின் தடுப்பு அரணை தாண்டி கோலாக்க முடியவில்லை. 33-வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் வீரர் சுர்சந்திரா சிங் பந்தை தடுக்க முயற்சித்த போது அது காலில் பட்டு எதிர்பாராதவிதமாக சுய கோலாக மாறியது. இதன் பின்னர் கடைசி நிமிடத்தில் கவுகாத்தி அணியின் மாற்று ஆட்டக்காரர் ரோச்ஹர்செலா கோல் போட்டார். முடிவில் கவுகாத்தி அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்தது. ஈஸ்ட் பெங்கால் அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். அந்த அணி இதுவரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஆட்டங்களில் மும்பை சிட்டி எப்.சி.-ஒடிசா எப்.சி. (மாலை 5 மணி), எப்.சி.கோவா-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.