கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணி முதல் தோல்வி

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கவுகாத்தி அணி முதல் தோல்வியை சந்தித்தது.

தினத்தந்தி

கவுகாத்தி,

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா 3-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) பந்தாடியது. பந்து அதிகமாக யுனைடெட் அணியினர் வசம் (57 சதவீதம்) சுற்றினாலும் இலக்கை நோக்கி உதைப்பதில் கொல்கத்தாவின் ஆதிக்கமே மேலோங்கியது. டேவிட் வில்லியம்ஸ் (11-வது நிமிடம்), ராய் கிருஷ்ணா (35, 90-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். கொல்கத்தாவின் மேலும் சில வாய்ப்புகள் மயிரிழையில் நழுவிப் போயின.

7-வது லீக்கில் ஆடிய கொல்கத்தா அணி 4 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி என்று 14 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. தனது முதலாவது தோல்வியை தழுவிய நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 10 புள்ளியுடன் (2 வெற்றி, 4 டிரா, ஒரு தோல்வி) 4-வது இடத்தில் இருக்கிறது. ஐதராபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக்கில் ஐதராபாத் எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் மல்லுகட்டுகின்றன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது