கால்பந்து

ஐ.எஸ்.எல் கால்பந்து: மும்பையை வீழ்த்தியது ஐதராபாத் அணி..!

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் மற்றும் மும்பை சிட்டி அணிகள் மோதின.

கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் மற்றும் பெங்களூரு எப்.சி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை தோற்கடித்து 8-வது வெற்றியை பதிவு செய்து 6-வது இடத்தை பிடித்தது. ஈஸ்ட் பெங்கால் கடைசி இடத்தை பெற்றது

இதைத் தொடந்து இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் மற்றும் மும்பை சிட்டி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மும்பைசிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் கோவா-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்