கால்பந்து

ஐ.எஸ்.எல் கால்பந்து; ஏ.டி.கே மோகன் பகான் அணியை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர் அணி

ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஏ.டி.கே மோகன் பகான் அணியை வீழ்த்தியது.

கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ஏ.டி.கே மோகன் பகான் மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.

போட்டியின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்காத நிலையில் போட்டியின் இரண்டாவது பாதியில் 56-நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் ரிட்விக் தாஸ் அந்த அணியின் முதல் கோலை அடித்தார்.

இதன் பிறகு இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என்ற கணக்கில் ஏ.டி.கே மோகன் பகான் அணியை வீழ்த்தியது.