கோவா,
11 அணிகள் இடையிலான 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 51-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி 3-2 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை தோற்கடித்து 4-வது வெற்றியை பதிவு செய்தது. இதில் ஜாம்ஷெட்பூர் அணி சார்பில் ஜோர்டான் முர்ரே (44 வது நிமிடம்), போரிஸ் சிங் (56 வது நிமிடம்), மற்றும் இஷன் பண்டிதா (90+3 வது நிமிடம்) ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர். நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி சார்பில் தேஸ்கோம் பிரவுன் ஆட்டத்தின் 4 வது நிமிடத்திலும் 90+1 வது நிமிடத்திலும் என 2 கோல்கள் அடித்தார்.
கடைசி நிமிடத்தில் இஷன் பண்டிதா அடித்த கோல் ஜாம்ஷெட்பூர் அணியின் வெற்றிக்கு உதவியது. இன்றைய ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்-மும்பை சிட்டி அணிகள் (இரவு 7.30 மணி) சந்திக்கின்றன.