கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: சென்னை அணியின் புதிய பயிற்சியாளராக லாஸ்லோ நியமனம்

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணியின் புதிய பயிற்சியாளராக லாஸ்லோ நியமிக்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நவம்பர் மாதம் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளில் ஒன்றான சென்னையின் எப்.சி. அணியின் பயிற்சியாளர் ஓவென் கோய்லெ கடந்த சீசனுடன் விலகினார். இந்த நிலையில் சென்னையின் எப்.சி. அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஹங்கேரியைச் சேர்ந்த சபா லாஸ்லோ நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

56 வயதான லாஸ்லோ சர்வதேச மற்றும் கிளப் அணிகளுக்கு 20 ஆண்டுகளுக்கு மேலாக பயிற்சியாளராக இருந்த அனுபவம் வாய்ந்தவர். உகாண்டா, லிதுவேனியா ஆகிய தேசிய அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். ஆனால் ஆசிய கண்டத்தில் பயிற்சியாளராக செயல்பட இருப்பது இதுவே முதல் முறையாகும். அவர் கூறுகையில் சென்னையின் எப்.சி. ஒரு குடும்பம் போன்றது. முடிவு எப்படி அமைந்தாலும் எல்லா நேரமும் ஆதரவு தரும் ரசிகர்களை கொண்டது.

இந்த குடும்பத்துடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சென்னை அணியை சிறந்த நிலைக்கு உயர்த்துவற்கு உதவி பயிற்சியாளர்களுடன் இணைந்து எல்லாவற்றையும் செய்வேன் என்று லாஸ்லோ குறிப்பிட்டார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு