கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் களம் இறங்கும் இந்திய வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி தொடருக்கான புதிய வழிகாட்டுதல் நடைமுறைகளை போட்டி அமைப்பு குழு நேற்று அறிவித்தது.

மும்பை,

2021-2022-ம் ஆண்டுக்கான இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி தொடருக்கான புதிய வழிகாட்டுதல் நடைமுறைகளை போட்டி அமைப்பு குழு நேற்று அறிவித்தது. இதன்படி ஐ.எஸ். எல். போட்டியில் எல்லா ஆட்டங்களிலும் இனிமேல் ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 7 இந்திய வீரர்கள் களம் இறங்குவார்கள். கடந்த ஆண்டு வரை 6 இந்திய வீரர்கள் களம் கண்டனர். தற்போது அந்த எண்ணிக்கையில் ஒன்று அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஒரு அணியில் களம் காணும் வெளிநாட்டு வீரர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 5-ல் இருந்து 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்