image courtesy; twitter/@IndSuperLeague 
கால்பந்து

ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; சென்னையின் எப்சி - பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை..!

புள்ளி பட்டியலில் சென்னையின் எப்சி 12 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், பஞ்சாப் 5 புள்ளிகளுடன் 11-வது இடத்திலும் உள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்சி - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த தொடரில் இதுவரை வெற்றி கணக்கை தொடங்காத பஞ்சாப் அணி இன்றைய ஆட்டத்தில் முதல் வெற்றியை பதிவு செய்ய கடுமையாக போராடும். அதேவேளையில் புள்ளி பட்டியலில் முன்னேற சென்னையின் எப்சி போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. 

புள்ளி பட்டியலில் சென்னையின் எப்சி 12 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், பஞ்சாப் 5 புள்ளிகளுடன் 11-வது இடத்திலும் உள்ளன.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு