Image Courtesy: @mohunbagansg / @eastbengal_fc / @IndSuperLeague  
கால்பந்து

ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; ஈஸ்ட் பெங்கால் - மோகன் பகான் அணிகள் இன்று மோதல்

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

தினத்தந்தி

கொல்கத்தா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - மோகன் பகான் அணிகள் மோத உள்ளன.

இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் மோகன் பகான் அணி 16 ஆட்டங்களில் ஆடி 10 வெற்றி, 3 டிரா, 3 தோல்வி கண்டு 33 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

அதேவேளையில் 18 ஆட்டங்களில் ஆடியுள்ள ஈஸ்ட் பெங்கால் அணி 4 வெற்றி, 6 டிரா, 8 தோல்வி கண்டு 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்