கோப்புப்படம்  
கால்பந்து

ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; அரையிறுதி ஆட்டத்தில் எப்.சி. கோவா - மும்பை சிட்டி அணிகள் இன்று மோதல்

12 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது

தினத்தந்தி

கோவா,

12 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் ஆட்டங்கள் மற்றும் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் முடிவில் ஒடிசா எப்.சி. மோகன் பகான், எப்.சி கோவா, மும்பை சிட்டி எப்.சி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

இரண்டு சுற்றுகளாக நடக்கும் அரையிறுதி ஆட்டங்களில் முறையே ஒடிசா எப்.சி - மோகன் பகான், எப்.சி கோவா- மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோத உள்ளன. அரையிறுதி ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் உள்ளூர் - வெளியூர் அடிப்படையில் 2 ஆட்டங்களில் மோத வேண்டும். இந்த அரையிறுதி (சுற்று 1 மற்றும் சுற்று 2) போட்டிகளின் முடிவில் ஒட்டுமொத்த கோல் அடிப்படையில் முன்னிலை பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்நிலையில் தொடரின் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின. நேற்று நடைபெற்ற அரையிறுதியின் முதல் சுற்று போட்டியில் மோகன் பகான் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஒடிசா எப்.சி வெற்றி பெற்றது. இதையடுத்து வரும் 28ம் தேதி கொல்கத்தாவில் நடக்கும் அரையிறுதியின் இரண்டாவது சுற்றில் ஒடிசா அணி டிரா செய்தாலே இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும்.

இந்நிலையில் கோவாவில் இன்று நடக்கும் அரையிறுதியின் முதல் சுற்று போட்டியில் எப்.சி கோவா- மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோத உள்ளன. இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு இரு அணிகளும் கடுமையாக முயற்சிக்கும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இவ்விரு அணிகள் வரும் 29ம் தேதி மும்பையில் நடைபெறும் அரையிறுதியின் இரண்டாவது சுற்றில் மீண்டும் மோத உள்ளன. 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்