கோப்புப்படம் 
கால்பந்து

ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; ஜாம்ஷெட்பூர் - கோவா அணிகள் இன்று மோதல்

இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் சென்னையின் எப்.சி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோத உள்ளன.

தினத்தந்தி

ஜாம்ஷெட்பூர்,

12 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் மாலை 5 மணிக்கு ஜாம்ஷெட்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் - கோவா அணிகள் மோத உள்ளன.

இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் கோவா அணி 20 ஆட்டங்களில் ஆடி 11 வெற்றி, 6 டிரா, 3 தோல்வி கண்டு 39 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் 21 ஆட்டங்களில் ஆடியுள்ள ஜாம்ஷெட்பூர் அணி 5 வெற்றி, 6 டிரா, 10 தோல்வி கண்டு 21 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது.

இதையடுத்து இரவு 7.30 மணிக்கு சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் சென்னை அணி 20 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 டிரா, 10 தோல்வி கண்டு 24 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

அதேவேளையில் 20 ஆட்டங்களில் ஆடியுள்ள நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 5 வெற்றி, 8 டிரா, 7 தோல்வி கண்டு 23 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வெற்றிக்காக அனைத்து அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை