Image Courtesy: @IndSuperLeague  
கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; பஞ்சாப் அணியை வீழ்த்தி 6வது வெற்றியை பதிவு செய்த கேரளா பிளாஸ்டர்ஸ்..!

10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும். இந்நிலையில் இந்த போட்டி தொடரில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள கேரளாவும், 11-வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து இரண்டாம் பாதியில் கேரளாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை டிமிட்ரியோஸ் டயமண்டகோஸ் கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.

இறுதியில் கேரளா அணி 1-0 என பஞ்சாப் அணியை வீழ்த்தி இந்த தொடரில் தனது 6வது வெற்றியை பதிவு செய்தது. 10 ஆட்டங்களில் ஆடியுள்ள பஞ்சாப் அணி 5 டிரா, 5 தோல்வி கண்டு இன்னும் முதல் வெற்றியை பதிவு செய்யாமல் உள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்