கால்பந்து

ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; நார்த் ஈஸ்ட் யுனைடெட் - ஒடிசா அணிகள் இன்று மோதல்

கவுகாத்தியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் - ஒடிசா அணிகள் மோத உள்ளன.

தினத்தந்தி

கவுகாத்தி,

12 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் கவுகாத்தியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் - ஒடிசா அணிகள் மோத உள்ளன.

இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் நார்த் ஈஸ்ட் அணி 21 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 8 டிரா, 8 தோல்வி கண்டு 23 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

அதேவேளையில் 21 ஆட்டங்களில் ஆடியுள்ள ஒடிசா 11 வெற்றி, 6 டிரா, 4 தோல்வி கண்டு 39 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில்  உள்ளது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை