image courtesy: @IndSuperLeague 
கால்பந்து

ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; அரையிறுதி ஆட்டத்தில் ஒடிசா-மோகன் பகான் அணிகள் இன்று மோதல்

ஒடிசா எப்.சி. மோகன் பகான், எப்.சி கோவா, மும்பை சிட்டி எப்.சி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

தினத்தந்தி

புவனேஷ்வர்,

12 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் ஆட்டங்கள் மற்றும் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் முடிவில் ஒடிசா எப்.சி. மோகன் பகான், எப்.சி கோவா, மும்பை சிட்டி எப்.சி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

இந்நிலையில் தொடரின் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. இரண்டு சுற்றுகளாக நடக்கும் அரையிறுதி ஆட்டங்களில் முறையே ஒடிசா எப்.சி - மோகன் பகான், எப்.சி கோவா- மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோத உள்ளன. அரையிறுதி ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் உள்ளூர் - வெளியூர் அடிப்படையில் 2 ஆட்டங்களில் மோத வேண்டும்.

புவனேஸ்வரில் இன்று நடக்கும் அரையிறுதியின் முதல் சுற்று போட்டியில் ஒடிசா - மோகன் பகான் அணிகள் மோதுகின்றன. இதையடுத்து வரும் 28ம் தேதி கொல்கத்தாவில் நடக்கும் அரையிறுதியின் இரண்டாவது சுற்றில் இவ்விரு அணிகள் மீண்டும் மோதுகின்றன.

கோவாவில் நாளை நடக்கும் அரையிறுதியின் முதல் சுற்று போட்டியில் எப்.சி கோவா- மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோத உள்ளன. இதையடுத்து வரும் 29ம் தேதி மும்பையில் நடைபெறும் அரையிறுதியின் இரண்டாவது சுற்றில் இவ்விரு அணிகள் மீண்டும் மோதுகின்றன.

இந்த அரையிறுதி (சுற்று 1 மற்றும் சுற்று 2) போட்டிகளின் முடிவில் ஒட்டுமொத்த கோல் அடிப்படையில் முன்னிலை பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு