Image Courtesy: @IndSuperLeague  
கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஒடிசா - மோகன் பகான் ஆட்டம் 'டிரா'

இன்று நடைபெற்று வரும் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் ஆடி வருகின்றன.

தினத்தந்தி

புவனேஷ்வர்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த தொடரில் ஒடிசாவில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிசா எப்.சி - மோகன் பகான் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க தீவிர முயற்சி செய்தன. ஆனாலும் இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க இயலவில்லை. இறுதியில் இந்த ஆட்டம் 0-0 என டிராவில் முடிந்தது.

இதையடுத்து பெங்களூருவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்று வரும் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் ஆடி வருகின்றன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது