Image Courtesy: @IndianFootball  
கால்பந்து

ஜூனியர் தெற்காசிய பெண்கள் கால்பந்து; தொடக்க ஆட்டத்தில் பூடானை வீழ்த்திய இந்தியா

16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேபாளத்தில் உள்ள லலித்புரில் நேற்று தொடங்கியது.

தினத்தந்தி

காத்மாண்டு,

16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேபாளத்தில் உள்ள லலித்புரில் நேற்று தொடங்கியது. 4 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியின் தொடக்க லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, பூடானை சந்தித்தது.

இதில் கோல் மழை பொழிந்த இந்தியா 7-0 என்ற கோல் கணக்கில் பூடானை வீழ்த்தியது. இந்திய அணியில் அனுஷ்கா குமாரி 'ஹாட்ரிக்' கோலும் (17, 27, 40-வது நிமிடம்), பியர்ல் பெர்னாண்டஸ் 2 கோலும் (13, 26-வது நிமிடம்), ஸ்வேதா ராணி (6-வது நிமிடம்), மாற்று வீராங்கனையாக களம் கண்ட தமிழகத்தை சேர்ந்த அன்விதா ரகுராமன் (61-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர்.

இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வருகிற 5-ந் தேதி வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை