image credit: @FIFAWWC 
கால்பந்து

தந்தை இறந்தது தெரியாமல் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆடிய கர்மோனா.!

மகளிர் கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் ஆனது.

தினத்தந்தி

சிட்னி,

9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சிட்னியில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து முதல்முறையாக உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்தது.

ஸ்பெயின் உலகக் கோப்பையை வென்றதன் பின்னணியில் ஒரு சோகம் அரங்கேறி இருப்பது தெரியவந்துள்ளது. இறுதி ஆட்டத்தில் கேப்டன் ஒல்கா கர்மோனா 29-வது நிமிடத்தில் அடித்த ஒரே கோலால் தான் ஸ்பெயின் கோப்பையை முதல்முறையாக கையில் ஏந்தியது.

கர்மோனாவின் தந்தை உடல்நலக்குறைவால் கடந்த வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார். ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி இருந்ததால் அவரிடம் தந்தையின் இறப்பு செய்தியை உடனடியாக சொல்லாமல் அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் மறைத்தனர். களத்தில் பம்பரமாக வலம் வந்த கர்மோனாவிடம் உலகக் கோப்பையை வென்ற சிறிது நேரத்தில் தந்தை இறந்த அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை கேட்ட சோகத்தால் கண்ணீர் விட்ட அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்ட உருக்கமான பதிவில், 'தனித்துவமான ஒன்றை அடைய நீங்கள் எனக்கு பலத்தை அளித்துள்ளீர்கள் என்பதை அறிவேன். இன்றிரவு என்னை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். என்னை பற்றி பெருமைப்பட்டு இருப்பீர்கள் என்பது தெரியும். அப்பா....உங்களது ஆத்மா சாந்தியடையட்டும்' என்று கூறியுள்ளார்.  

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்