கால்பந்து

சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர்; மேற்கு வங்கத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற கேரளா!

மற்றொரு ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி மேகாலயா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

திருவனந்தபுரம்,

75-வது தேசிய அளவிலான சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள், கேரள மாநிலம் மலப்புரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடரில், மலப்புரம் மஞ்சேரி பய்யநாடு மைதானத்தில் நேற்று நடைபெற்ற குரூப்-ஏ பிரிவு ஆட்டத்தில், 32 முறை கோப்பையை கைப்பற்றிய மேற்கு வங்க அணி, கேரள அணியை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் கேரளா 2-0 என்ற கோல் கணக்கில் மேற்கு வங்கத்தை வீழ்த்தியது. இதன் மூலம், கேரளா தொடர்ந்து 2 ஆட்டங்களில் வென்று குரூப்-ஏ பிரிவில் முதலிடம் பெற்றுள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் ராஜஸ்தானை வீழ்த்தி மேகாலயா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

மலப்புரம் கொட்டப்பாடி மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் முதலாவது ஆட்டத்தில், குஜராத்-சர்வீசஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.

இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில், ஒடிசா-மணிப்பூர் அணிகள் களம் காணுகின்றன. இப்போட்டி, மலப்புரம் மஞ்சேரி பய்யநாடு மைதானத்தில் நடைபெறுகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...