கோப்புப்படம் 
கால்பந்து

பாலியல் வழக்கில் கால்பந்து வீரர் மேசன் க்ரீன்வுட் கைது..!

இங்கிலாந்தைச் சேர்ந்த கால்பந்து வீரர் மேசன் க்ரீன்வுட் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

லண்டன்,

மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியில் விளையாடும் க்ரீன்வுட், பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

க்ரீன்வுட்டிற்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண், சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்தது. மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கழகம் க்ரீன்வுட்டை இடைநீக்கம் செய்துள்ள நிலையில், மீண்டும் அறிவிக்கப்படும் வரை அவர் ஓல்ட் ட்ராபோர்ட் க்ளப்பிற்காக விளையாட மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மேலும் விசாரணை நடைபெற உள்ளநிலையில் க்ரீன்வுட் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை தெரிவித்துள்ளது.

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை