பார்சிலோனா,
உலகப் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரர், “மேஜிஷியன்” என அழைக்கப்படும் ரொனால்டினோ சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறிய கருத்துகள் கால்பந்து உலகில் பெரிய கவனத்தை பெற்றுள்ளன. மெஸ்ஸிதான் எல்லாக் காலத்திலும் சிறந்த கால்பந்து வீரர் என்று கூறினார்.
மேலும், “நான் மெஸ்ஸியின் ஆசிரியர் அல்ல. உண்மையில் நான்தான் அவரது மாணவன்” என்றும் தெரிவித்தார். ரொனால்டினோ மற்றும் மெஸ்ஸி இருவரும் 2005 முதல் 2008 வரை பார்சிலோனா அணியில் ஒன்றாக விளையாடினர். பின்னர் ரொனால்டினோ 2018-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
மெஸ்ஸியை ஒரு சிறந்த வீரராக உருவாக்கியதில் ரொனால்டினோவின் பங்கு மிக முக்கியமானது. மெஸ்ஸியின் முதல் கோலுக்கு அசிஸ்ட் (Assist) செய்தவர் ரொனால்டினோ தான்.