கால்பந்து

அதிகமான வீரர்கள் சுனில் சேத்ரியை போல இருக்க விரும்புகிறார்கள்; லூயிஸ் கார்சியா

இந்திய கால்பந்தாட்டத்தின் திறன் குறித்து ஸ்பெயின் வீரர் லூயிஸ் கார்சியா ஆதரித்து பேசினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

லிவர்பூல் மற்றும் பார்சிலோனா அணிகளில் ஸ்டிரைக்கராக விளையாடிய முன்னாள் கால்பந்தாட்ட வீரர் லூயிஸ் கார்சியா, எதிர்காலத்தில் இந்திய கால்பந்தாட்டத்தின் திறனை ஆதரித்து பேசினார்.

இந்திய கால்பந்தாட்டத்தின் திறமையை கார்சியா நன்கு அறிந்தவர் ஆவார். 2014 இல் இந்தியன் சூப்பர் லீக்(ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் ஆரம்பிக்கப்பட்ட போது, அவர் ஐ.எஸ்.எல் கால்பந்தில் பங்கேற்றுள்ளார்

ஐ.எஸ்.எல் கால்பந்து லீக்கின் தொடக்கப் பதிப்பில், 43 வயதான ஸ்பெயின் வீரர் லூயிஸ் கார்சியா அட்லெடிகோ டி கொல்கத்தா அணியை ஐஎஸ்எல் கோப்பையில் வெற்றி பெற வழிநடத்தினார்.

இந்திய கால்பந்தாட்டத்தின் திறன் குறித்து அவர் கூறியதாவது,

இங்கு திறன் உள்ளது, திறமை உள்ளது மற்றும் ஒரு ஆர்வம் உள்ளது, இது மிகவும் முக்கியமானது.

அதிகமான வீரர்கள் சுனில் சேத்ரியை போல இருக்க விரும்புகிறார்கள்.

அப்படி இருக்கும் வீரர்களை கொண்டுதான், நீங்கள் ஒரு நாள், உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு சவாலாக இருக்கும் ஒரு அணியை உருவாக்க முடியும் என்றார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு