கால்பந்து

பெனால்டி ஷூட் வாய்ப்பை தவறவிட்ட கொலம்பியா கால்பந்து வீரருக்கு கொலை மிரட்டல்

பெனால்டி ஷூட் வாய்ப்பை தவறவிட்ட கொலம்பியா கால்பந்து வீரருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

தினத்தந்தி

போகோடா,

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடந்து வருகிறது. இதன் கால்இறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட்-அவுட்டில் கொலம்பியா அணி 4-5 என்ற கோல் கணக்கில் சிலியிடம் தோற்று வெளியேறியது. இந்த ஆட்டத்தில் கொலம்பியா வீரர் வில்லியம் டெசில்லோ பெனால்டி ஷூட் வாய்ப்பில் கோல் அடிக்காமல் தவறவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்துள்ள கொலம்பியாவை சேர்ந்த ஒருவர் சமூக வலைதளம் மூலம் வில்லியம் டெசில்லோவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதில் 1994-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியில் சுய கோல் அடித்ததால் சுட்டு கொல்லப்பட்ட கொலம்பியா வீரர் ஆந்த்ரே எஸ்கோபருக்கு நேர்ந்த கதி தான் வில்லியம் டெசில்லோவுக்கும் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தகவலை வில்லியம் டெசில்லோ உள்ளூர் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். ஆனால் அவர் போலீசில் புகார் எதுவும் செய்யவில்லை. இந்த மிரட்டல் குறித்து விசாரித்து வருவதாக கொலம்பியா போலீசார் தெரிவித்துள்ளனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு