image courtesy: AFP 
கால்பந்து

இந்திய கால்பந்து அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்

இந்திய கால்பந்து அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி, 

2026-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஆசிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் இந்திய அணி தோல்வி கண்டு உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இதைத்தொடர்ந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து இகோர் ஸ்டிமாக்கை நீக்கி இந்திய கால்பந்து சம்மேளனம் அதிரடி நடவடிக்கை எடுத்தது.

இதனையடுத்து புதிய தலைமை பயிற்சியாளரை தேடும் பணியில் இந்திய கால்பந்து சம்மேளனம் இறங்கியது. அதற்கு பலர் விண்ணப்பித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்திய கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஸ்பெயினை சேர்ந்த மனோலோ மார்க்வெஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT